கல்கிஸ்சையில் பதற்ற நிலை! குண்டுகளை மீட்கும் முயற்சியில் பொலிஸார்


கல்கிஸ்சை பகுதியில் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
டெம்பிள் பிளேஸ் பகுதியிலுள்ள வீடொன்றில் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அந்தப் பகுதியில் அதிரடி படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் குண்டுகள் வெடிக்கும் அபாய நிலை உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். தெஹிவளையில் நேற்று முன்னர் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் மூவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்