தெஹிவளையில் சற்று முன்னர் பதற்றம்! அதிரடி படையினர் குவிப்பு


தெஹிவளையில் சற்று முன்னர் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தெஹிவளை அத்தபத்து மாவத்தையிலுள்ள தேவாலயத்திற்கு அருகில் சந்தேகத்திடமான முறையில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த வானில் இருந்த இருவர் சற்று முன்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த பகுதி முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தப் பகுதிக்கு அருகில் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் இருவர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்