இலங்கையில் புதிய தாக்குதல் நடத்த திட்டம்: அமெரிக்க தூதுவர் பேட்டி


இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி நடந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீண்டும் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Alaina Teplitz பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை குண்டுவெடிப்பில் 42 வெளிநாட்டினர்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இராணுவம் மற்றும் பொலிசார் சந்தேக நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன என்றும் பல நாட்களுக்கு பாதுகாப்பு பலத்தப்பட்டு இருக்கும் என புலனாய்வு பொலிஸ் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினரால் 44 பேர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுகின்றனர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சோதனைகள் நடைபெற்று வந்தாலும், மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை வந்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்