இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் முக்கிய அறிவிப்பு
இலங்கையின் பல பகுதிகளில் நேற்று தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், கட்டுவப்பிட்டிய தேவாலயம், ஷங்கிரிலா தேவாலயம் மற்றும் சினமன் கார்டன் ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்டவை அனைத்து தற்கொலை தாக்குதல் என அரசாங்க ஆய்வாளர் ஆரியனந்த வெலியங்க உறுதி செய்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை உறுதி செய்துள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற விசாரணை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்