வெளிநாடொன்றில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்; விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கையால் கடும் அச்சத்தில் பொதுமக்கள்!


இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் ரிக்டர் 6.8 அளவில் பயங்கர நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது, இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் உள்ள சுலவேசி தீவின் கிழக்கு கடற்கரையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்தோனேஷியாவின் மொரோவலி மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தோனேஷியாவின் பலு நகரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் 4300 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்