தமிழக வீரர் அஸ்வினை அநியாயத்துக்கு அசிங்கப்படுத்திய கோஹ்லி..கொல்கத்தா போட்டியில் நடந்த வீடியோ


கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் அஷ்வினின் மன்கட் முறையை நினைவு படுத்தும் விதமாக கோஹ்லி நடந்து கொண்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.
இப்போட்டியில் கோஹ்லியின் அபாரா சதத்தால் பெங்களூரு அணி 213 ஓட்டங்களை எட்டியது. கடினமான இலக்கு என்பதால், பெங்களூரு அணி எளிதாக வெற்றி பெற்று விடும் என்று நினைத்த போது, கடைசி கட்டத்தில் ரசுல் மற்றும் ரானாவின் அதிரடி ஆட்டம் கோஹ்லிக்கு பீதியை கிளப்ப இறுதியாக பெங்களூரு அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தி போராடி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் கொல்கத்தா அணி சார்பில் ஆட்டத்தின் 18-வது ஓவரை சுனில் நரைன் வீசினார். அப்போது அந்த ஓவரின் கடைசி பந்தை சுனில் நரை வீச வந்த போது, பந்தை வீசாமல் நின்று கொண்டார்.
பவுலர் முனையில் நின்ற கோஹ்லி, அஷ்வினின் மன்கட் முறையை நினைவு படுத்தும் விதமாக கேலியாக கிரீசின் உள்ளே தான் இருக்கிறேன் என்பது போல் பேட்டை அடித்து காட்டினார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் பெவிலியனில் ஆக்ரோஷமாக கோஷமிட்டனர். அப்போது கோலி 80 ஓட்டங்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியின் போது அஸ்வின் பட்லரை மான்கட் முறையில் அவுட்டாக்கி வெளியேற்றினார்.
என்ன தான் கிரிக்கெட் விதிப்படி அது நடந்தாலும், அஸ்வினினி இந்த முறை பலருக்கும் பிடிக்கவில்லை, இதனால் அவரை பலரும் விமர்சித்தனர்.
தற்போது கோஹ்லியும், அதிலிருந்து நானும் உஷாராக இருக்கிறேன் என்பதையே கிண்டல் செய்யும் விதமாக இப்படி செய்துள்ளார் என்று இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்