நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்! பரபரப்பு நிலவுகிறது


சென்னை பெரம்பூரில் இருக்கும் பூத்தில் நாம் தமிழர் கட்சியினர் முகவரை துணை ராணுவத்தினர் தாக்கியதால் போராட்டம் நடந்து வருகிறது.
பெரம்பூரில் பெரியார் நகர் வாக்குசாவடிக்கு வெளியே இந்த போராட்டம் நடந்து வருகிறது.
அங்கே முகவராக இருக்கும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் சாப்பாடு கொடுப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது துணை ராணுவத்தினர் தடுத்தால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதன்போது துணை ராணுவத்தினர் தாக்கியதில் முகவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து அங்கு குவிந்த நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்