இந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்தொடர் அடுத்த மாதம் 30-ந்தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான ஐசிசி தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து முதன்முறையாக உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இந்தியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என அந்த அணியின் கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மோர்கன் கூறுகையில் உலகக்கோப்பை கிரிக்கெட்கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. இதை நாங்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக எங்கள் அணியை வலுவாக கட்டமைத்துள்ளோம். அதற்காக நாங்கள் காத்திருக்க முடியாது.

நாங்கள் ஒவ்வொரு முறையும் இந்தியாவில் விளையாடும்போது, நாங்கள் வெளிநாட்டு அணியாகவே பார்க்கப்படுகிறோம். ஆனால் இந்தியா உலகின் எந்த பகுதியில் சென்று விளையாடினாலும் அது அவர்களின் சொந்த மைதான போட்டியாகவே தோன்றும்.

இந்தியா மிகப்பெரிய அணி. அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டின் அணி. அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் ஆதரவு உள்ளது.
கடந்த இரண்டு வருடத்தில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடியது மிகவும் கடினமாக தொடராக இருந்தது. இரண்டு அணிகளுக்கும் வாய்ப்பு உள்ள நிலையில் மோத இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்