இலங்கை குண்டுவெடிப்பு நடந்தது எப்படி?... வெளியான திக் திக் காணொளி! கண்ணீர் வரவழைக்கும் மக்களின் ஓலம்


இலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த ஷாக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
இலங்கையில் இன்று அதிகாலை வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது. ஈஸ்டர் பண்டிகையை மக்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கும் வேளையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதேபோல் 3 ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது.
மேலும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது. இதில் 280க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் 160க்கும் அதிகமானோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வருகிறது.
இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச்சில வெடிகுண்டு வெடித்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஆகும் இது. இங்குதான் முதல் குண்டு வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


அந்த பகுதி வழியாக சென்ற காரில் டேஷ்போர்டில் இருந்த கேமராவில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது. கார்கள் எல்லாம் சாலையில் ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்கும் போதே இந்த குண்டு வெடித்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று விசாரணை நடந்து வருகிறது. அதேபோல் வெடிகுண்டு வெடித்த பின் அந்த பகுதி எப்படி இருந்தது என்பது குறித்தும் உயிரை உறைய வைக்கும் வீடியோக்கள் அதிகமாக வெளியாகி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்