கட்டுநாயக்க விமான நிலையம் செல்பவர்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரிவின் முக்கிய அறிவித்தல்


இலங்கையில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் புதுப்புது நிபந்தனைகளும் தடைகளும் விதிக்கப்பட்டுவருகின்றன.
கடந்த ஞாயிற்றுக் கிழமை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் நாடு முழுவதிலும் தேடுதல்களை பாதுகாப்புப் பிரிவினர் முடுக்கிவிட்டுள்ளனர்.
இதேவேளை விமான நிலையத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், விமானப் பயணிகள் மாத்திரமே கட்டுநாயக்க விமான நிலைய கட்டிடப் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலைய பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டில் தற்பொழுது எழுந்துள்ள பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தினால் பயணிகள் மத்தியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்