தாக்குதலாளிகள் தங்கிய வீட்டிலிருந்து வெளியாகிவரும் திடுக்கிடும் இரகசியங்கள்!

கொழும்பு தெமட்டகொடவில் நேற்றையதினம் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய வீட்டில் தங்கியிருந்தவர்களே ஷங்கிரிலா ஹோட்டலிலும் தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் ஷங்கிரிலா விடுதியில் 616 எனும் இலக்கத்தையுடைய அறையினை வாடகைக்கு எடுத்துக்கொண்ட சந்தேக நபர்கள் இருவரும் குறித்த தெமட்டகொட வீட்டின் முகவரியினையே வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது.
குறித்த சந்தேகிகள் விடுதியின் மூன்றாம் மாடியில் அமைந்துள்ள உணவகத்திலும் நடை பாதையிலும் குண்டை வெடிக்கவைத்துள்ளனர்.
காலை வேளை அனைவரும் உணவுக்காக ஒன்றுகூடும் இடத்தினையே இருவரும் தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இருவரும் தங்கியிருந்த அறையினை உடைத்து உள்ளே சென்ற புலனாய்வாளர்கள் அங்கிருந்து தீவிரவாத இயக்கம் ஒன்றின் கொள்கைகள் கொண்ட கையேடுகளையும் அங்கிருந்து மீட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்