விடுதலை புலிகளை பாராளுமன்றத்தில் பெருமையாக நினைத்த மஹிந்த


விடுதலை புலிகளுடனான 30 ஆண்டுக்கால போரில் கூட இவ்வாறு பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் புற பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து நாட்டில் நிலவும் அச்ச சூழல் குறித்து விவாதிப்பதற்காக விசேட பாராளுமன்ற அமர்வுக்காக சபை இன்று ஒரு மணியளவில் கூடியது.
இந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதியும் பிரதமரும் முரணான திசையில் இருந்துக்கொண்டு இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது. அதேபோன்று தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கை சாதாரண விடயமாகவும் கருத முடியாது.
அரசாங்கம் இனியேனும் நாட்டின் முன்னுள்ள அவதானத்தை கருத்தில் கொண்டு செயற்படும் பட்சத்தில் முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்