இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியது யார்? அந்த அமைப்பு எது? ஆதாரத்தை அம்பலப்படுத்திய அமைச்சர்கள்


இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப் போகும் பயங்கரவாத அமைப்பின் எச்சரிக்கை ஏற்கனவே கிடைத்திருந்தாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டிருந்தமையினால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஏற்கனவே வெளியாகி இருந்த அறிக்கையில் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான அறிக்கையையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் தொடர்பில் எனது தந்தை ஏற்கனவே என்னை எச்சரித்திருந்தார். புலனாய்வு பிரிவின் மூலம் அவர் தகவல் அறிந்திருந்தார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்கூட்டியே வெளியான அறிக்கை போலியானது என அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் அந்த ஆவணம் உண்மையானது எனவும் அமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்