தமிழில் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் சி.எஸ்.கே வீரர்கள்... வைரலாகும் வீடியோ!


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்களும் தமிழில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இந்தப் புத்தாண்டு தினம் இலங்கையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளர்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்களும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை கூறியுள்ளனர். சுரேஷ் ரெய்னா, பிராவோ உள்ளிட்ட வீரர்கள் தங்களது பெயரை தமிழ் மொழியில் எழுதி, தமிழில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவை சி.எஸ்.கே தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங், தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை ட்விட்டரில் தமிழில் தெரிவித்துள்ளார். அதில், “பாசமும், நேசமும் இனிதோடு, நாளைய சூரியவிடியலின் துணையோடு, பல வெற்றிப்படிகளின் கனவோடு, கல்வியும் கலையும் அறிவோடு, உண்மையும் உழைப்பும் உயிரோடு, உறுதிமிகு தமிழா விழிப்போடு, நாளைய உலகம் வெல்க துணிவோடு. தமிழோடும், தமிழரோடும் உறவாடு! நல் உறவோடு! #தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள் அன்பு சொந்தங்களே!” என அவர் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்