பால் வடியும் முகம் கொண்ட இந்த சிறுவன் தீவிரவாதியாக மாறியது எப்படி? சொல்கிறார் அவரது சகோதரி!


பால் வடியும் முகம் கொண்ட சிறுவனாக இருந்த தனது சகோதரன், எப்படி இத்தனை உயிர்களைக் கொல்லத் துணிந்த கொலைகாரன் ஆனான் என்பது குறித்து இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமாக இருந்த ஒரு நபரின் சகோதரி மனம் திறந்துள்ளார்.
பிரித்தானியாவுக்கு கல்வி கற்க சென்ற தனது சகோதரன் சாதரணமாகத்தான் திரும்பி வந்ததாகவும், ஆனால் அதன் பின் அவுஸ்திரேலியா சென்று வந்தபோது மிகவும் ஆழ்ந்த மதப்பற்று மிக்கவனாக திரும்பி வந்ததாகவும் தெரிவிக்கிறார் Taj Samudra ஹொட்டலில் குண்டு வைப்பதில் தோல்வியுற்று பின்னர் சிறு கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் வெடி குண்டை பரிசோதிக்கும்போது உயிரிழந்த Abdul Lathief Jameel Mohamed என்னும் தீவிரவாதியின் சகோதரி.
பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த Abdul Lathiefஇன் சகோதரி Samsul Hidaya, கல்வியில் உயரம் எட்டிய தனது சகோதரன், பின்னர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தீவிரவாத கருத்துக்களில் ஊறி தீவிரமாக மாறிப்போனதாகவும் தெரிவிக்கிக்கிறார்.
அவுஸ்திரேலியாவுக்கு உயர்கல்வி கற்கச் சென்று பின் முற்றிலும் மாறுபட்ட மனிதனாக Abdul Lathief திரும்பியதாக தெரிவிக்கும் Hidaya, தனது உறவினர்கள் தாடியை ட்ரிம் பண்ணியதற்குக்கூட மிகவும் அவர் ஆத்திரமடைந்ததாகவும் தெரிவிக்கிறார்.
நீண்ட தாடி வைத்துக் கொண்டு தனது நகைச்சுவை உணர்வை முற்றிலும் இழந்து உறவினர்களைப் பார்த்து புன்னகைப்பதைக் கூட அவர் நிறுத்தி விட்டதாக தெரிவிக்கிறார் Hidaya.
சொல்லப்போனால் ஒருவரையொருவர் பார்ப்பதை தவிர்ப்பதற்காக நாங்கள் வெவ்வேறு சாலைகளில் பயணிக்கத் தொடங்கினோம் என்கிறார் அவர்.
என்னால் அவன் இவ்வளவு மாறியிருப்பான் என்பதை நம்ப முடியவில்லை என்று கூறும் Hidaya, அவன் அவுஸ்திரேலியாவில் இருந்தபோதுதான் ஏதோ நடந்திருக்கிறது, அது அவனது பர்சனாலிட்டியையே மாற்றிவிட்டிருக்கிறது என்கிறார்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சர் Ruwan Wijewardene, குண்டுதாரிகளில் ஒருவர் பிரித்தானியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் படித்தவர் என்ற விவரத்தை வெளியிட்ட பின்னரே Abdul Lathiefஇன் அடையாளம் வெளி உலகுக்கு தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்