ஈழத்தில் ஏற்பட்டதை போன்று தமிழகத்திலும் ஏற்படும்! சீமான் எச்சரிக்கை


தமிழர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஈழத்தில் ஏற்பட்டது போல் தமிழகத்தில் ஏற்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“தமிழ் மண்னை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்பது பாசிசம் கிடையாது. ஒரு தேசிய இன உரிமையை காப்பற்ற வேண்டும் என்பது மட்டுமே நோக்கம்.
மாநிலங்களை பிரித்ததன் நோக்கம் அந்தந்த மொழி பேசும் மக்கள் அந்த மாநிலத்தை ஆள வேண்டும் என்பதற்காக. கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பில் கேரள மாநிலத்தில் முதல்வர் வேட்பாளராக பேட்டியிட முடியுமா?
இதே போல் மோதியை வேறு மாநிலத்தில் போட்டியிட செய்ய முடியுமா? அது போலவு என் இன மக்களை தமிழன் ஆள வேண்டும் என்பது பாசிசம் கிடையாது. அது எங்கள் உரிமை.
தமிழகத்தில் திட்டமிட்டு வெளி மாநிலத்தவர்களை சேர்ந்தவர்களை குடியமர்த்தி வருகின்றனர். கேரளாவில் பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்தால் மட்டுமே குடியுரிமை வழங்கப்படும்.
எனினும், தமிழகத்தில் ஒரே மாதத்தில் பெற்றுவிடலாம். இது ஒரு பேராபத்தான போக்கு. தமிழர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு இல்லையெனில் ஈழத்தில் ஏற்பட்டது போல் தமிழகத்தில் ஏற்படும். சொந்த நிலத்தில் அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்