மூக்கில் டியூப்.... சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த அன்பழகன்: வியந்த மக்கள்


இன்று தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து வருகின்ற நிலையில், திமுக பொதுச்செயலாளர் தனது உடல்நிலை சரியில்லா நிலையிலும் கடமை தவறாமல் வந்து வாக்களித்துள்ளார்.
96 வயதான திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அண்ணாநகரில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
மூக்கில் டியூப் பொருத்தப்பட்டு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.
இந்த வயதிலும் அவரது கடமை உணர்ச்சியை கண்டு அங்கிருந்த மக்கள் வியந்தனர்.
க.அன்பழகனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஓய்வெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்