இலங்கை தொடர்பில் இஸ்ரேல் விடுத்துள்ள பகீர் எச்சரிக்கை: கலங்கடிக்கும் காரணம்


உலகெங்கிலும் உள்ள இலங்கை மக்களை உலுக்கிய ஈஸ்டர் கொலைவெறி தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசு பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் பயங்கரவாத தடுப்பு பணியகம் வெளியிட்டுள்ள அந்த எச்சரிக்கை அறிக்கையில்,
பயணிகள் எவரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம் எனவும், இலங்கைக்கு மிக மிக கடுமையான அச்சுறுத்தல் தற்போதும் அமுலில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி இலங்கையில் தற்போதுவரை தங்கியிருக்கும் வெளிநாட்டு பயணிகள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் தற்போதைய சூழல் கட்டுக்குள் வரும்வரை எவரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம் எனவும் வலியுறித்தியுள்ளது.
இந்த எச்சரிக்கையானது, இஸ்ரேல் அரசின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகளுடன் கலந்தாலோசனைகளுக்கு பின்னர் பயங்கரவாத தடுப்பு பணியகம் வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக வல்லரசு நாடுகள் வெளியிடும் எச்சரிக்கைகளை பல நிலைகளில் தரம் பிரிக்கின்றனர்.
இதில் இலங்கை தொடர்பான எச்சரிக்கையை நிலை ஒன்று என வகைப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்பது உத்தியோகப்பூர்வமற்ற உத்தரவாகும்.


ஈஸ்டர் தின கொலைவெறித் தாக்குதலில் பெரும்பாலும் உள்ளூர் மக்களே என்றாலும், பிரிட்டிஷ், அமெரிக்க, அவுஸ்திரேலிய, துருக்கிய, இந்திய, சீன, டேனிஷ், டச்சு மற்றும் போர்த்துகீசிய நாட்டவர்கள் உள்ளிட்ட 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்