ஸ்டாலின் பேசியதை கேட்டு மேடையில் கண்கலங்கிய கனிமொழி


தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, தன்னை திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரித்து பேசியதை கேட்டு மேடையில் கண்கலங்கினார்.
கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடுவதை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கனிமொழியை ஆதரித்துப் பேசினார்.
அவர் பேசியதாவது, தூத்துக்குடியில் கலைஞரின் பிள்ளை கனிமொழியே போட்டியிடுகிறார்.
கலைஞர் பன்முகத் திறமை கொண்டவர். எழுத்தாளர், கவிஞர், தலைவர், நிர்வாகத்திறமை மிக்கவர். அப்படிப்பட்ட திறமைகளைக் கொண்டவர் கனிமொழி.
கனிமொழியை அறிமுகப்படுத்தவேண்டும் என்றால் என்னை அறிமுகப்படுத்துவது போன்றது. கலைஞரை அறிமுகப்படுத்துவது போன்று பொருத்தமாக இருக்கும் என்று கூறினார்.
கனிமொழியைப் பற்றியும், கருணாநிதியோடு ஒப்பிட்டும் ஸ்டாலின் பேசியபோது கனிமொழி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்