அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம்; உலகரங்கில் பரபரப்பை ஏற்படுத்திய ஈரானின் எச்சரிக்கை!


அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது.
இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படையை பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்தால் பதிலடியாக இந்த அறிவிப்பை வெளியிடுவோம் என ஈரான் எச்சரித்துள்ளது
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஈரான் நாட்டை பாதுகாக்கும் இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படையை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக சமீபத்தில் சில மேற்கத்திய ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நாங்களும் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்தான்புல் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈரான் பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புத்துறை தலைவர் ஹெஷ்மட்டொல்லாஹ் ஃபலாஹட் பிஷே, ‘எங்கள் படைகளை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்தால் நாங்களும் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்