கொழும்பில் சற்று முன்னர் வெடிபொருட்கள் மீட்புகொழும்பிலுள்ள தனியார் பேருந்து நிலையத்திலிருந்து சற்று முன்னர் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்து டெடனேட்டர் (Dtonators)எனப்படும் வெடிப்பொருட்கள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் பை ஒன்றுடன் வந்ததாகவும் சற்று நேரத்தில் அவர் அங்கிருந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலுக்கு அமைய டெடனேட்டர்கள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பில் நேற்று பல்வேறு பகுதிகளில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்றையதினம் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்