இலங்கையை விட்டு அவசரமாக வெளியேறும் வெளிநாட்டவர்கள்! கட்டுநாயக்கவில் பலத்த பாதுகாப்பு


இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து வெளிநாட்டவர்கள் அவசரமாக நாட்டை விட்டு வெளியேறுவதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலா பயணமாக வந்த வெளிநாட்டவர்களே இவ்வாறு உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதன் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை வரலாற்றில் சமகாலத்தில் சுற்றுலாத்துறை மூலம் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் கேள்விக் குறியாக மாறியுள்ளது.
சுற்றுலாத்துறையின் மூலம் பாரிய வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக சுமார் 40 வெளிநாட்டவர்கள் வரையில் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டவர்கள் உடனடியாக இலங்கையை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதேவேளை கட்டுநாயக்க விமான நிலைய வீதிக்கு அருகில் குண்டு ஒன்று மீட்கப்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் தீவிர பாதுகாப்பு கடமையில் சிறப்பு அதிரடி படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


விமான நிலையத்தில் வழமைக்கு மாறாக கடும் கெடுபிடிகள் ஆரம்பித்துள்ளதுடன், தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்