கோஹ்லிக்கும் ரவி சாஸ்த்த்ரிக்கும் சண்டையா?


இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை மாதம் 14-ந்தேதி வரை 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய வீரர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குறித்து தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி முதல்முறையாக தனது கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அணியின் டாப்-3 இடத்துக்குளேயே இருக்கிறது.
இதன் மூலம் இந்திய அணி ஒரு குறிப்பிட்ட (விராட்கோலி) வீரரையே நம்பி இல்லை. நிலையான வெற்றியின் ஒட்டு மொத்த பெருமையும் அணியைத்தான் சாரும்.
அணி தேர்வில் நான் தலையிடுவது கிடையாது மற்றும் அணி தேர்வு தொடர்பாக ஏதாவது ஆலோசனை இருந்தால் கேப்டன் மூலம் தெரிவிப்பேன்.

உலக கோப்பை போட்டிக்கு 15 வீரர்களை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும் என்பதால் ஒரு சில வீரர்கள் தவிர்க்க முடியாமல் விடுபட்டு போவார்கள். இது முற்றிலும் எதிர்பாராததாகும்.
இந்த போட்டி நீண்ட காலம் கொண்டது என்பதால் 16 வீரர்கள் இருந்தால் சௌகரியமாக இருக்கும் என்று நாங்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) தெரிவித்து இருந்தோம் ஆனால் ஐ.சி.சி. 15 வீரர்களுக்கு தான் அனுமதி அளித்திருந்தது.
அணிக்கு தேர்வாகாத வீரர்கள் மற்ற வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் வாய்ப்பை இழந்த வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் அணிக்கு அழைக்கப்படலாம்.
பேட்டிங்கில் 4-வது வீரர் வரிசையில் எப்பொழுதும் குறிப்பிட்ட வீரரை மட்டுமே இறக்கிக் கொண்டிருக்க முடியாது.
முதல் 3 வீரர்கள் வரிசையில் மாற்றம் செய்ய முடியாது. ஆடுகளத்தின் தன்மை, எதிரணி ஆகியவற்றை பொறுத்தே 4-வது வரிசை வீரர் முடிவு செய்யப்படுவார்.
மேலும் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியில் பன்முகத்தன்மை கொண்ட வீரர்கள் உள்ளதால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
அத்துடன் அவர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கின்ற காரணத்தாலும் சொந்த மண்ணில் விளையாடுவதனாலும் தற்சமயம் உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக விளங்குகிறார்கள்.
ஆனால் குறிப்பிட்ட நாளில் எந்த அணியையும், எந்த அணியாலும் வீழ்த்த முடியும். உலக கோப்பை போன்ற பெரிய போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்திலும் உச்சபட்ச திறனை வெளிப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.கருத்துரையிடுக

0 கருத்துகள்