உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டது எவ்வாறு? சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்


இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பைக்கான இந்திய அணி முதல் முறையாக புள்ளி விவரங்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்திய அணி தோற்றபிறகு, இந்த அணி வீரர்களின் பலம் மற்றும் பலவீனம் ஆகிய தகவல்கள் திரட்டப்பட்டன.
இந்திய அணி வீரர்களின் தகவல்கள் மட்டுமல்லாமல் எதிரணி வீரர்களின் பலம் மற்றும் பலவீனமும் சேகரிக்கப்பட்டது. மேலும், இந்திய வீரர்கள் எந்தெந்த அணிகளுக்கு எதிராக திணறுகிறார்கள். இங்கிலாந்து, அவுஸ்திரேலிய போன்ற அணிகள் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எப்படி ரன்களை சேர்க்கின்றன உட்பட முழுத்தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த தகவல்களை வைத்து தேர்வுக்குழுவினர் வீரர்களை தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
இந்திய அணி வீரர்களின் விவரங்கள்
கோஹ்லி(கேப்டன்) ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல்,டோனி, தினேஷ் கார்த்திக், ஜாதவ், ஹர்திக்பாண்ட்யா, ஜடேஜா, விஜய் சங்கர், குல்தீப், சகால், பும்ரா, புவனேஷ்வர், ஷமி.

வீரர்கள் எத்தனை முறை விளையாடியுள்ளார்கள்?
டோனிக்கு இது 4-வது உலக கோப்பை ஆகும். இதன் முன்பு 2007, 2011, 2015 ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கோஹ்லிக்கு இது 3-வது உலகக்கோப்பை. அவர் 2011, 2015 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ரோகித் சர்மா, தவான், ஜடேஜா, முகமது ‌ஷமி, புவனேஷ்வர் குமார் (2015) மற்றும் தினேஷ் கார்த்திக் (2007) ஆகியோருக்கு இது 2-வது உலக கோப்பையாகும்.
ஹர்திக் பாண்டியா, லேகேஷ் ராகுல், கேதர் ஜாதவ், விஜய் சங்கர், பும்ரா, யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் உலக கோப்பையில் முதல் முறையாக ஆடுகிறார்கள்.
தினேஷ் கார்த்திக் 2007 உலக கோப்பை அணியில் இடம் பெற்று ஒரு ஆட்டம் கூட விளையாடவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்