அது ரகசியம்..... வெளியில் சொல்லமாட்டேன்: டோனிஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் வாட்சனின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எட்டாவது வெற்றியை பதிவு செய்தது.
மேலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தேர்ச்சி பெற்ற முதல் அணி என்ற சிறப்பை சென்னை அணி இதன்மூலம் பெற்றுள்ளது.
ஆட்டநாயகன் விருது பெற்ற ஷேன் வாட்சன், 53 பந்துகளில், 9 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 96 ரன்களை எடுத்திருந்தார்.
போட்டி முடிந்த பின் சென்னை அணியின் வெற்றி ரகசியம் குறித்து டோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த டோனி, அந்த ரகசியத்தை நான் தெரிவித்தால் என்னை ஏலத்தில் எடுக்கமாட்டார்கள்.
நான் ஓய்வு பெறும் வரை வேறு எதையும் சொல்லமாட்டேன். மேலும், சென்னை அணியின் வெற்றிக்கு, போட்டியாளர்களை தவிர்த்து அதன் ஊழியர்களும் உறுதுணையாக இருந்து, அணியினருக்கு நேர்மறையான சூழலை வழங்குகின்றனர் என கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்