உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு! முக்கிய வீரருக்கு வாய்ப்பு


இங்கிலாந்தில் தொடங்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 30ஆம் திகதி இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
முதல் அணியாக நியூசிலாந்து தங்களது அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்க தேசம், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தங்களது 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டன.
இந்நிலையில், பாகிஸ்தான் உலக்கோப்பைக்கான தங்களது கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது. சர்ப்பராஸ் அகமது இந்த அணிக்கு தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாபர் அசாம், முகமது ஹபீஸ், இமாம் உல்ஹக், சோயிப் மாலிக் ஆகிய வீரர்கள் துடுப்பட்டட்த்தில் மிரட்ட உள்ளனர்.


பந்துவீச்சாளர்களில் முகமது ஆமிருக்கு இடம் கிடைத்துள்ளது. அவர் மாற்று ஆட்டக்காரர் பட்டியலில் உள்ளார். இங்கிலாந்து தொடருக்காகவும் தெரிவு செய்யப்பட்டுள்ள அவர், அந்த தொடரில் செயல்படுவதைப் பொறுத்து இறுதி அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அணி விபரம்
 • சர்ப்பராஸ் அகமது (அணித்தலைவர்)
 • இமாம் உல்ஹக்
 • அபித் அலி
 • ஜூனைத் கான்
 • பாபர் அசாம்
 • முகமது ஹபீஸ்
 • பகீம் அஷ்ரப்
 • முகமது ஹஸ்னைன்
 • பஹார் ஜமான்
 • ஷதப்கான்
 • ஹாரிஸ் சோகைல்
 • ஷகீன் ஷா அப்ரிடி
 • ஹசன் அலி
 • சோயிப் மாலிக்
 • இமாது வாசிம்
 • முகமது ஆமிர் (மாற்று ஆட்டக்காரர்)

 • ஆசிப் அலி (மாற்று ஆட்டக்காரர்)

கருத்துரையிடுக

0 கருத்துகள்