இலங்கையில் கடும் வரட்சியால் ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து


நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக வைரஸ் நோய் தொற்று பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களே இந்த நோய் தொற்றிற்கு அதிகமாக பாதிக்கப்படுவதாக பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஆகிய நோய் அறிகுறிகளுடன் மக்கள் வைத்தியசாலைக்கு செல்கின்றனர். அவர்களில் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வரட்சியான காலநிலை காரணமாக பெற்றுக் கொள்ளும் நீரை கொதிக்க வைத்து ஆற வைக்காமல் அருந்துகின்றமையினால் இந்த வைரஸ் தொற்று பரவுகின்றதென சந்தேகிக்கப்படுகின்றது.
நன்று நீரை கொதித்து ஆற வைத்து பருகுமாறும், மலசல கூடம் சென்று வந்ததன் பின்னர் சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை கழுவுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்