கொழும்பில் நடிகை ராதிகா தங்கியிருந்த ஹொட்டலில் குண்டுவெடிப்பு: அதிர்ச்சியுடன் அவர் வெளியிட்ட டுவீட்


கொழும்பில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ள நிலையில் அங்குள்ள ஹொட்டலில் தங்கியிருந்த நடிகை ராதிகா அது தொடர்பாக டுவீட் செய்துள்ளார்.
இலங்கையின் கொழும்பில் உள்ள கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நட்சத்திர ஹொட்டல்கள் உட்பட ஆறு இடங்களில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குண்டுவெடிப்பு நடந்த Cinnamongrand ஹொட்டலில் நடிகை தங்கியிருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இது குறித்து அவரின் டுவிட்டர் பதிவில், இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது, கடவுள் எங்களுடன் இருங்கள்.
நான் கொழும்பில் உள்ள Cinnamongrand ஹொட்டலில் இருந்து புறப்பட்ட பின்னர் அங்கு குண்டு வெடித்துள்ளது, இதை நம்ப முடியவில்லை அதிர்ச்சியாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.கருத்துரையிடுக

0 கருத்துகள்