வன்னியில் இராணுவமயமாக்கல் முறை மீண்டும் ஆரம்பம்


நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் இலங்கையில் வடக்கு மாகாணங்களில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற இராணுவமயமாக்கல் நிர்வாக முறையில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்பொழுது வன்னியில் இலங்கை இராணுவம் நடைமுறையில் அதிகாரத்தை தக்க வைத்திருக்கும் பிரதேசங்களாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்கள் காணப்படுகின்றது.
இதன்படி கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகம் இலங்கை இராணுவ சேனைப்படை 57, 65, 66,(SFHQ-K)
முல்லைத்தீவு பாதுகாப்பு இராணுவ தலைமையகம் சேனைப்படை59 64 68(SFHQ-MLT)
வன்னி பாதுகாப்பு இராணுவத்தலைமையகம் சேனைப்படை 21 54 56 61 62(SFHQ-W)
வடமத்திய மாகாண கட்டளைத்தளபதி (NCNA)SLN
வடமாகாண கடற்படைத்தளபதி (NWNA)SLN
வடபிராந்திய கட்டளைத்தளபதி (NZC)இலங்கை விமானப்படை (SLAF)
கிழக்கு மாகாண கடற்படை கட்டளைத்தளபதி (ENA)SLN
CSD Force HQ வவுனியா
வன்னியிலுள்ள மொத்த சனத்தொகையில் 2.1 வீதமாகும். இந்நிலையில் வன்னியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரின் தொகையை சரியாக புள்ளிவிபரங்கள் இல்லாவிட்டாலும் சுமார் 60000 இராணுவத்தினர் அங்கு வாழ்ந்து வருகின்றதாக 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவிபரம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்