உலகத்த விட என்ன நான் நம்புனேன்.. அத தாண்டி நண்பன் டோனி என்ன நம்புறாங்க! ஹர்பஜனின் தெறிக்கும் ட்வீட்
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்களே எடுத்து தோல்வியடைந்தது. சென்னை அணி தரப்பில் ஹர்பஜன், ஸ்காட் குஜ்ஜெலின் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

குறிப்பாக ஹர்பஜன் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 17 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் கெய்லின் விக்கெட்டை ஹர்பஜன் வீழ்த்தியது ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.
இந்நிலையில், சென்னை அணியின் வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் சினிமா வசன பாணியில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ‘நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும், நம்ப வேண்டியது உலகத்த இல்ல உன்ன மட்டும் தான். நான் என்ன நம்புனேன், அத தாண்டி என் நண்பன் @msdhoni @ChennaiIPL @CSKFansOfficial என்ன நம்புறாங்க. அதுக்கு கைமாறா வெற்றி ஓரம்கட்ட கட்ட தான் வெறித்தனம் எவியா ஏறும், சந்தோஷத்துல அழுகுறேன் நன்றி #CSKvKXIP’ என தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்