கருணாநிதி இல்லாமல் முதல் முறையாக வாக்களிக்க வந்த தயாளு அம்மாள்: கண்கலங்கிய திமுகவினர்


மறைந்த கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் கோபாலபுரம் வாக்குசாவடியில் தனது வாக்கினை வீல் சேரில் வந்து பதிவு செய்துள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்க்ப்பட்டுள்ள தயாளு அம்மாள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் ஒய்வில் இருக்கிறார்.
எப்போதும் தேர்தலின் போது தனது கணவருடன் வந்து வாக்கினை பதிவு செய்வார் தயாளு அமமாள். கருணாநிதி இறந்தபின்னர் நடக்கும் தேர்தல் என்பதால் வீல் சேரில் வந்து தயாளு அம்மாள் வாக்களித்தது திமுகவினரை கண்கலங்க வைத்துள்ளது.


ஸ்டாலின் வேட்பு மனுதாக்கல் செய்தபோது தயாளு அம்மாள்தான் விபூதி வைத்து ஆசி கூறி அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்