பேஸ்புக்கில் லைக் பொத்தான் நீக்கப்படுமா? அதிர்ச்சியில் பயனர்கள்


பேஸ்புக் வலைத்தளம் அதிகமாக பயன்படுத்தப்படுவதற்கு அதில் தரப்பட்டுள்ள லைக் பொத்தான் வசதியும் ஒரு காரணமாகும்.
ஆனால் இந்த லைக் பொத்தானை பயன்படுத்துவதற்கான வரையறை ஒன்றினை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஐக்கிய இராச்சியம் முனைப்புக்காட்டி வருகின்றது.
இதன்படி 18 வயதிற்கு குறைவான பயனர்கள் பேஸ்புக்கினை பயன்படுத்தும்போது அவர்களுக்கு லைக் பொத்தான் வசதி காண்பிக்கப்படக்கூடிய என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ் வயதெல்லைக்கு மேற்பட்டவர்கள் மாத்திரமே லைக் வசதியினை பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும் எண்ணுகின்றனர்.
இதற்கான முன்மொழிவினை ஐக்கிய இராச்சியத்தின் Information Commissioner’s Office (ICO) வெளியிட்டுள்ளது.
பேஸ்புக் வலைத்தளத்தின் ஊடாக நிர்வாணப் படங்கள் உட்பட வயது வந்தவர்களுக்கான பல தகவல்கள் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.
இவற்றிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் முகமாகவே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.


இதேவேளை குறித்த அமைப்பு ஆய்வு ஒன்றினையும் மேற்கொண்டுள்ளதுடன், இதற்காக 280 சிறுவர்களையும் பயன்படுத்தியே இம் முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்