136 பயணிகளுடன் ஆற்றில் இறங்கிய விமானம்- அமெரிக்காவில் பரபரப்பு


136பயணிகளை ஏற்றிக் கொண்டு ப்ளோரிடாவுக்கு வந்த போயிங் 737 பயணிகள் விமானம், செயின்ட் ஜான் நதியில் நிலை தடுமாறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கியூபாவில்இருந்து ப்ளோரிடா நகரத்திற்கு வந்த போயிங் 737 பயணிகள் விமானம் தரையிறங்கும் வேளையில் நிலை தடுமாறி அருகில் இருந்த செயின்ட் ஜான் நதி சென்று நின்றது.

இது அமெரிக்க நேரப்படி இரவு 9:40 மணிக்கு இந்த சம்பவம், ஜாக்சன் என்ற இடத்தில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜாக்சன்வின் மேயர், தனதுட்விட்டர் பக்கத்தில்,விமானத்தில்இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலூம், விமானத்தின் எரிபொருள்நீரில் கலப்பதைத்தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்று கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்