இதை தமிழகத்திடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும்: மே 17 இயக்கம்


தமிழகத்திடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பதிவிட்டுள்ளார்.

39 நாடாளுமன்ற தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. தேசிய கட்சியான பாஜக வேட்பாளர்கள் ஒருவர் கூட முன்னிலையில் இல்லை.

இந்நிலையில் தமிழகத்தின் நாடாளுமன்ற தேர்தல் முடிவு குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பெரியார் நிலம் உயர்ந்து நிற்கிறது. தமிழர்கள் எப்போதும் பாசிவாதிகளை நிராகரிப்பவர்கள்.

பாசிச மற்றும் இனிவாதிகளுக்கு எதிராக எப்படி போராட வேண்டும் என்பதை தமிழகத்திடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும் என திருமுருகன் காந்தி பதிவிட்டு்ள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்