ஜேர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் கார் சோதனை வெற்றி!


ஐந்து இருக்கைகளைக் கொண்ட பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை ஜேர்மனியை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது.

வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் அனைத்து நாடுகளிலும், பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வானில் பறந்து செல்லும் ஏர் டாக்சிகளை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில், ஜேர்மனியைச் சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனம் ஒன்று இந்த பணியில் இறங்கியுள்ளது. லிலியம் எனும் அந்த நிறுவனம், வரும் 2025ஆம் ஆண்டுக்குள் போக்குவரத்து சேவைக்கு பறக்கும் காரை அறிமுகப்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் 5 இருக்கைகளைக் கொண்ட, பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை அந்நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் இந்த காருக்கு ‘லிலியம் ஜெட்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் கூறுகையில், தற்போதுள்ள பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த பறக்கும் கார் மணிக்கு 300 கிலோ மீற்றர் வரை பறக்க இயலும் என தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்