உங்களுக்கு பாகிஸ்தானில் நல்ல சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறேன்! ட்விட்டரில் வலுக்கும் காம்பீர்-அப்ரிடி மோதல்இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் காம்பீருக்கும், பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடிக்குமான விமர்சன மோதல் தொடர்ந்து வருகிறது.

பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி ‘The Game Changer' எனும் தனது சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார்.

அவருக்கு ஏதோ மனரீதியான பிரச்சனை இருக்கிறது என்றும், எந்த சாதனையும் செய்யாமல் திமிருடன் நடந்து கொள்வார் என்றும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் காம்பீரை விமர்சிக்கும் வகையில் சில சம்பவங்களையும் அப்ரிடி எழுதியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவுதம் காம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

ஷாகித் அப்ரிடியை மனநிலை பாதிகப்பட்டவர் என்று நினைப்பதாகவும், தனிப்பட்ட முறையில் அவரை உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், காம்பீருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரித்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘காம்பீருக்கு ஏதோ மனநல பிரச்சனை இருக்கும் என நினைக்கிறேன். எனக்கு சில நல்ல மருத்துவமனைகளுடன் தொடர்பு இருக்கிறது. அவருக்கு பாகிஸ்தானில் நல்லவிதமான சிகிச்சை அளிக்க நான் ஏற்பாடு செய்கிறேன். பாகிஸ்தான் மக்களுக்கு பெரும்பாலும் இந்திய அரசு விசா எளிதாக வழங்கிவிடாது.


ஆனால், இந்தியாவில் இருந்து வரும் ஒவ்வொருவரையும் நான் வரவேற்கிறேன். எங்கள் தேசத்து மக்களும், அரசும் இந்தியர்களை எப்போதும் வரவேற்பார்கள். கவுதம் காம்பீரையும் வரவேற்போம்.


நான் காம்பீருக்கு விசா பெற்றுக்கொடுத்து, பாகிஸ்தானில் நல்ல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறேன்’ என தெரிவித்துள்ளார். இதனால் காம்பீருக்கும், அப்ரிடிக்கும் இடையிலான வார்த்தை மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
கருத்துரையிடுக

0 கருத்துகள்