அஜித்தின் பில்லா வசனத்தை உல்ட்டா செய்து இம்ரான் தாஹிர் பதிவிட்ட ட்வீட்.!

                                  
இன்றைய இளசுகளிடம் இருந்து பர்பில் கேப் வாங்க சரிக்கு சமமாக போட்டி போடுகிறார் இம்ரான் தாஹிர். 40 வயதை கடந்தாலும், இவர் பந்து வீச்சின் வீரியம் குறையவில்லை, நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே தான் செல்கிறது.
விக்கெட் எடுத்துவிட்டு இவர் ஓடும் ஸ்டைலை பார்த்து பராசத்தி எக்ஸ்பிரஸ் என்ற செல்ல அடைமொழியும் பெற்று விட்டார். இந்த சீசன் பல இக்கட்டான சூழலில் இவர் தான் தோனிக்கு கை கொடுக்கிறார் .
வெற்றிக்கு பின் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டுவது இவரின் வழக்கம். பொதுவாக ரஜினி பட பன்ச் வசனத்தை தான் தட்டுவார். ஆனால் இம்முறை, “என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும்… ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா ..” வசனத்தை உல்டா செய்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்