மும்பை அணி இவ்வளவு ரன் தான் அடிக்கும்! போட்டி ஆரம்பிக்கும்போதே துல்லியமாக கூறிய சினிமா பிரபலம்


இன்று ஐதாராபாத்தில் சென்னை- மும்பை அணிக்களுக்கு இடையே IPL தொடரின் இறுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தனது முதல் இன்னிங்ஸை முடித்துள்ள மும்பை அணி 149 ரன்கள் எடுத்து சென்னை அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்த நிலையில் மும்பை அணியின் இந்த ஸ்கோரை போட்டி தொடங்கி சில நிமிடங்களேயே ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ சுப்பிரமணியன் மிக துல்லியமாக கூறி ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளார்.

இதுமட்டுமில்லாமல் இறுதி ஆட்டத்தில் மோதும் இரு அணிகளில் முதல் பேட் செய்யும் அணிக்கு 12வது ஓவரில் கேம் சேஞ்ச் ஆகும் என்று ஏப்ரல் 26ஆம் தேதியே கூறியுள்ளார்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்