டிடிவி தினகரன் கட்சிக்கு அவர் குடும்பத்தினர் கூட ஓட்டு போடவில்லையா? அவரின் பரிதாப நிலை


மக்களவை தேர்தலில் 300 வாக்குச்சாவடிகளில் அமமுக கட்சிக்கு ஒரு வாக்கு கூட விழாதது டிடிவி தினகரனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவர் பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.

மக்களவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் 300 வாக்குச்சாவடிகளில் அந்த கட்சிக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இது குறித்து பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மக்களின் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறேன் என்று தேர்தல் முடிவு நாளன்றே டுவிட்டரில் தெரிவித்திருந்தேன். அதையே தான் இப்போதும் சொல்லுகிறேன்.

300-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ஒரு ஓட்டு கூட எங்கள் கட்சிக்கு விழவில்லை என்பதை கேட்கும் போது அதிர்ச்சியாக உள்ளது.

மக்கள், அமமுகவுக்கு ஓட்டுப்போடவில்லை என்றே வைத்துக்கொள்வோம். எங்கள் கட்சியினரே கூட ஓட்டுப்போடவில்லை என்று எடுத்துக்கொள்வோம்.

ஒவ்வொரு பூத்துக்கும் முகவர்களாக உள்ள ஐந்து பேர் கூடவா ஓட்டுப்போடவில்லை.

நான் ஓட்டுப் போட்ட வாக்குச்சாவடியில் எங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுகள் இருக்கின்றன.

ஆனால் 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுக பூஜ்ஜியம் என்கிற அறிவிப்பைத் தான் பார்த்தேன். இதற்கான பதிலையும் விளக்கத்தையும் தேர்தல் ஆணையம் தான் சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்