டோனியிடம் நான் என்ன சொன்னேன் தெரியுமா? வைரலாகும் புகைப்படத்திற்கு விளக்கம் கொடுத்த பிரீத்திஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டி முடிந்த பின்பு டோனியிடம் நான் என்ன பேசினேன் என்பதை பிரீத்தி ஜிந்தா விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது.

இன்று பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பிளே ஆப் சுற்றை தக்க வைப்பதற்கான போட்டியின் பஞ்சாப், சென்னை அணியுடன் மோதியது.

சென்னை அணி நிர்ணயித்த 170 ஓட்டங்களை 14 ஓவரில் எட்டியிருந்தால், அந்தணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்தணி 18-வது ஓவரில் வெற்றி பெற்றதால், பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்பு பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா, அவருடன் பேசும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார்.

இதனால் ரசிகர்கள் பலரும் டோனியிடம் நீங்கள் அப்படி என்ன தான் பேசுனீர்கள் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

அதற்கு பிரீத்தி ஜிந்தா தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். டோனிக்கு நான் மட்டும் ரசிகர் இல்லை அவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால் இந்த முறை என்னுடைய விஸ்வாசம் அவருடைய மகளா ஜுவாவிடம் உள்ளது என்பதால், உங்கள் மகளை யாராவது கடத்தலாம், கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்