ஈரானில் பதற்றம்! படைத் துருப்புகளை அனுப்ப தயாராகும் அமெரிக்கா


ஈரான் பதற்றம் காரணமாக பில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை சவூதிக்கு விற்பனை செய்வதற்கான அனுமதியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கியுள்ளார்.

அமெரிக்க காங்கிரஸின் அனுமதியை பெற்றுக்கொள்ளாது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேரடியாகவே இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஈரான் பதற்றம் காரணமாக சவூதிக்கு 8 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்ய, காங்கிரஸின் அனுமதியை பெற்றுக்கொள்ளாது அமெரிக்க ஜனாதிபதி நேரடியாக அனுமதியை வழங்கியுள்ளார்.

ஈரான் விவகாரத்தை காரணம் காட்டி காங்கிரஸின் அனுமதி பெற்றுக்கொள்ளாது இவ்வாறு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த நடவடிக்கைகளுக்கு, ஜனநாயகவாதிகள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதேவேளை, 1500 படை வீரர்கள் மத்திய கிழக்கிற்கு அனுப்ப இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார்.

அத்துடன், போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் பிற பாதுகாப்பு ஆயுதங்கள் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, எண்னெய் கப்பல் ஒன்றை தாக்கியதாக ஈரான் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்