சென்னையில் சாலையில் வீசப்பட்ட கோடிக்கணக்கான பணம்... யாருடையது என்று கண்டறிந்த பொலிசார்


சென்னையில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒரு கோடியே 56 லட்சம் ரூபாயை சாலையில் வீசியெறிந்து சென்ற பணம் தொழில் அதிர்பர் ஒருவரின் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கோட்டூர்புரம் பகுதி பொலிசார் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான வகையில் நபர் ஒருவரை பிடிக்க முற்பட்டுள்ளனர். ஆனால் அவர் சிக்காமல் தப்பி சென்றுள்ளார்.

இதையடுத்து அந்த நபர் தன்னிடம் இருந்த 3 பைகளை சாலையில், வீசியெறிந்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் பொலிசார் அவரை துரத்தாமல் அந்த பைகளில் என்ன இருக்கிறது என்று சோதனையிட்டனர். அதில் ஒரு கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் இருந்தது தெரியவந்தது.

ஆனால் அதற்குள் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் வேகமாகச் சென்று தலைமறைவானார். இந்நிலையில் அது எங்கிருந்து வந்த பணம் என்று பொலிசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அது தொழில் அதிபர் பாலசுப்ரமணியன் என்பவர் வீடில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், இந்த பணம் கொள்ளையடித்த நபர் யார் என்பது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்