கூடுதல் அதிகாரத்துடன் களமிறங்கும் ராகுல்: ஷாக் கொடுத்த காங்கிரஸ்


டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நிறைவு.

இக்கூட்டத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம்நபி ஆசாத்,ப.சிதம்பரம், மல்லிகார்ஜூன கார்கே, கேப்டன் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, ராஜினாமா கடிதத்தை செயற்குழுவிடம் வழங்கியதாகவும், ஆனால், செயற்குழு உறுப்பினர்கள் அதை ஏற்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கம் அளித்திருந்தார்.

செயற்குழு கூட்டம் நிறைவடைந்த நிலையில், மக்களவை தேர்தல் தோல்வி மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் எனவும், கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் ராகுல் காந்திக்கு வழங்கப்படுவதாக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்