உல்லாச உலகம்.. கடலுக்குள் பனைமர வடிவில் கட்டப்பட்ட செயற்கை தீவு..! ஆச்சர்ய வீடியோஇவ்வுலகில் கண்டங்கள், பெருங்கடல்கள், தீவுகள், தீபகற்பங்கள், பாலைவனங்கள் என பலவகை நிலப்பரப்புகள் உள்ளன. இவை அனைத்தும் இயற்கையால் உருவாக்கப்பட்டது.

தீவு என்றாலே இயற்கையாக உருவானதாக இருக்கும். ஆனால், இங்கு மனிதர்கள் வியக்கத்தக்க செயற்கை தீவுகள் பலவற்றை உருவாக்கியுள்ளனர். அவற்றுள் ஒன்றுதான் இந்த தீவு.

துபாய், இன்று உல்லாச உலகமாக இருப்பதற்கு காரணமே, செயற்கையாக உருவாக்கப்பட்ட பனைமரத் தீவுகள்தான்.

நம் நாட்டில் கடலில் ஒரு பாலத்தை கட்டினாலே பெரிய விஷயமாகப் பேசுகிறோம். ஆனால், இங்கே கடலில் மண்ணைக் கொட்டி தீவு ஒன்றை உருவாக்கியுள்ளனர். அந்த தீவு தான் 'பாம் ஜுமேரா".

பாம் ஜுமேரா (Palm Jumeirah) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய செயற்கை தீவாகும். இது மூன்று வகை பாம் தீவுகளுள் ஒன்று.

கட்டுமானம் :
துபாயின் பாம் ஜுமேரா தீவு 2001-ல் தொடங்கி 2009-ல் திறக்கப்பட்டது. மணல் மற்றும் பாறைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கடலில் பத்தரை மீட்டர் ஆழத்துக்கு மணல் கொட்டப்பட்டு மேடாக்கப்பட்டது. ஏறத்தாழ 40,000 தொழிலாளர்களைக் கொண்டு இத்தீவைக்
கட்டமைத்தார்கள்.

கரையிலிருந்து கடலுக்குள் ஒன்றரைக் கிலோமீட்டர் நீளத்துக்குப் பாதை அமைத்து, இருபுறமும் பனை மர வடிவில் அமைக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

இதில் சுற்றியிருக்கும் பிறைவடிவிலான தீவு மட்டும் 11 கிலோமீட்டர் நீளம் கொண்டது. பிற பகுதிகளுடன் இது சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் செல்பவர்கள் மட்டுமே பனை மர வடிவத்தைப் பார்க்க முடியும்.

ஹோட்டல்கள், பல வகையான குடியிருப்புகள், கடற்கரைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை இங்கு உண்டு.

உலகம் முழுவதும் இருந்து தினந்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்