நீர்கொழும்பில் பெரும் பதற்றம்! வாகனங்களுக்கு தீ வைப்பு! அதிரடி படையினர் குவிப்பு

நீர்கொழும்பு பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இன வன்முறையாக மாறி பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டும், தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்தப் பகுதியில் பெருமளவு அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதிகளின் குழுக்களுக்கு இடையிலான முறுகல் வன்முறையாக மாறியுள்ளது.

இதன்போது சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இருந்த வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

எனினும் அதிரடி படையினர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு படையினர் அருகாமையிலுள்ள வீடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்