இலங்கையின் முதல்தர நீதிபதிகளில் ஒருவரான இளஞ்செழியனின் தகப்பனார் மறைவு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி


நாட்டின் முதல்தர நீதிபதிகளில் ஒருவரான திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் தகப்பனார் சதாசிவம் மாணிக்கவாசகரின் மறைவு செய்தியை கேட்டு ஆழ்ந்த துயரமடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தகப்பனார் சதாசிவம் மாணிக்கவாசகர் இயற்கை எய்தியமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும்,

பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் இந்த இலங்கை தீவில் நீதியை நிலைநாட்டும் வகையிலும் செயற்பட்டு வரும் நம் நாட்டின் முதல்தர நீதிபதிகளில் ஒருவரான திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் அன்புக்குரிய தகப்பனார் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு ஆழ்ந்த துயரமடைகிறேன்.

தான் பிறந்த யாழ். மண்ணிலேயே வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தில் எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் நல் ஆசானாக சேவையாற்றிய அமரர் மாணிக்கவாசகர், அப்பாடசாலையின் ஓய்வுபெற்ற அதிபர் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் அவர்களின் அன்புக்கணவர் என்பதையும் ஐந்து பிள்ளைகளின் அன்புக்குரிய தகப்பனார் என்பதையும் அறிகின்றேன்.

தமது சமூகம் சார்ந்த மாணவ சமுதாயத்திற்கு அறிவையும், ஆற்றலையும் பெற்றுக்கொடுப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மாணிக்கவாசகர் அவர்கள், தமது சொந்தப் பிள்ளைகளையும் நாட்டும் வீட்டுக்கும் பெருமை சேர்க்கம் விதத்திலும் மனித நேயத்தை மதிக்கும் வகையிலும் வளர்த்தெடுகத்திருக்கின்றார் என்பதை நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் சமூக பொறுப்புணர்வுமிக்க நடத்தை நமக்கு எடுத்துணர்த்துகின்றது.


அவரைப் போன்றே மாணிக்கவாசகர் அவர்களின் ஏனைய பிள்ளைகளான நோர்வே நாட்டின் வைத்திய அதிகாரி மாணிக்கவாசகர் இளஞ்சிறையன், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் மற்றும் ஆசிரியை மாணிக்கவாசகர் சிவகௌரி, மாணிக்கவாசகர் இளங்குமரன் ஆகியோரையும் சமூகத்திற்கு சிறந்த சேவைகளை ஆற்றக்கூடியவர்களாக வளர்த்தெடுத்திருப்பதிலிருந்து மாணிக்கவாசகர், சிவபாக்கியம தம்பதியினரின் வாழக்கை அர்த்த புஷ்டியானதாக அமைந்திருந்தது என்பதை எம்மால் உணர முடிகின்றது.

89 வருடகால இவ்வுலக வாழ்க்கையின் முடிவில் அமரத்துவம் அடைந்துள்ள சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்களின் மறைவையிட்டு துயரும் அதேவேளை, அன்னாரின் பிரிவினால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரின் பரியார் திருமதி சிவபாக்கியம் அம்மையார் அவர்களுக்கும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உள்ளிட்ட உற்றார் உறவினர்களுக்கும் எனது ஆழந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றேன் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை கடந்த வாரமே அனுப்பப்பட்டிருந்த போதிலும் தற்போதே ஊடகங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்