சென்னை அணியின் தோல்விக்கு என்ன காரணம்? அடுத்த ஐபிஎல்லில் விளையாடுவீர்களா? டோனியின் பதில்


மும்பை அணிக்கெதிரான போட்டியில் தோல்விகள் எப்போதும் காயப்படுத்தும், ஆனால் அதைப் பற்றி இப்போது யோசிக்க நேரமில்லை என்று சென்னை அணியின் தலைவர் டோனி கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டோனி தலைமையிலான சென்னை 1 ஓட்டம் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை சந்தித்து கோப்பையை இழந்தது.

இந்நிலையில் போட்டிக்கான தோல்வி குறித்து சென்னை அணியின் தலைவர் டோனி கூறுகையில், இந்த போட்டியைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இரு அணிகளுமே நிறைய தவறு செய்துள்ளோம்.

நாங்கள் என்ன தவறு செய்தோமோ அதே தவறைத்தான் எதிரணியும் செய்தனர். ஆனால் என்ன நாங்கள் இந்த பைனலுக்கு சரியாக தான் வந்தாமோ என்றால் இல்லை என்றே கூறலாம். ஏனெனில் எங்கள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒரு சீரான ஆட்டத்தை கொடுக்கவில்லை.

ஆனால் அதே சமயம் பந்து வீச்சாளர்களுக்கு தான் கிரெடிட் போய் சேர வேண்டும், கொஞ்சம் சிறப்பாக விளையாடி இருக்கலாம், இருப்பினும் தோல்வியடைந்துவிட்டோம்.

தோல்வி எப்போதும் காயப்படுத்தும், தற்போது அதற்கான நேரமில்லை, அடுத்து உலகக்கோப்பை தொடர் வரவிருக்கிறது. அதற்கு தயாராக வேண்டும். இடையில் கிடைக்கும் நேரங்களில் இதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவீரர்களா என்று கேட்ட போது, டோனி எந்த ஒரு தயக்கமும் இன்றி, நிச்சயமாக நம்பிக்கை இருக்கிறது என்று டோனி கூறியுள்ளார்.

டோனி உலகக்க்கோப்பை போட்டியோடு அனைத்து வித போட்டிகளிலும் ஓய்வு பெற்றுவிடுவார் என்று கூறி வந்த நிலையில், அவரின் இந்த பதில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்