பதவி விலகுகிறேன்............! கண்ணீர் சிந்தி அறிவித்தார் பிரித்தானிய பிரதமர்!!


பிரித்தானியப்பிரதமர் திரேசா மே கென்சவேட்டிவ் கட்சித்தலைமைத்துவத்தில் இருந்து விலகுவதாக இன்று காலை அறிவித்துள்ளார்.

இதன் மூலம் பிரித்தானியாவில் புதிய பிரதமரைத் தெரிவு செய்வதற்கான போட்டிக்கு வழி கிடைத்துள்ளது .அநேகமாக கட்சியின் புதிய தலைவராக பொறிஸ்ஜோன்சன் தெரிவு செய்யலாமென எதிர்பார்க்கபடுகிறது

பிரதமர் மே, தனது சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து பிரெக்சிட்டுக்கான புதிய ஒப்பந்தம் குறித்த கடுமையாக எதிர்ப்பையும் அழுத்தங்களையும் கொண்டுள்ளநிலையில் அவர் பதவி விலக வேண்டும் என கடந்த சில நாட்களாக அழுத்தங்கள் அதிகரித்திருந்தன.

இந்தநிலையில் இன்று தனது பதவி விலகல் யூன் 7 இல் இடம்பெறும் என அவரே அறிவித்துள்ளார்

திரேசாமேயின் புதிய பிரெக்ஸிட் கொள்கையில் தனக்குச் உடன்பாடு இல்லாத புதிய கூறுகள் உள்ளதாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து நாடாளுமன்றக் கட்சித் தலைவர் அன்ரியா லீட்சம் நேற்று முன்தினம் இரவு பதவி விலகியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்