மோடியின் வெற்றிக்குப் பின் இம்ரான்கான் டுவிட்டரில் என்ன கூறினார்?


பாஜக கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தவுடன் 542 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று தனித்து ஆட்சியமைக்கவுள்ளது.

இந்த நிலையில் மோடிக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அது போல் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.

அவர் கூறுகையில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


தெற்கு ஆசியாவின் அமைதி, வளர்ச்சி மற்றும் வளத்திற்காக பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன் என தனது டுவிட்டரில் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே ஒரு விழாவில் பேசிய இம்ரான் கான், காஷ்மீர் விவகாரங்கள் தீர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என இம்ரான்கான் கூறியிருந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்