இலங்கை, சிங்களவர்களின் நாடு அல்ல! மங்கள வெளியிட்ட தகவல்


இலங்கை ஒரு பௌத்த நாடு அல்ல எனவும் இலங்கையர்களின் நாடு எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த கருத்தினை வெளியிட்டார்.

என்னாலும் சிலர் போன்று கார்ட்போர்ட் வீரனாக முடியும். இலங்கை சிங்கள நாடு பௌத்த நாடு, சிங்களவர்களுக்கு விரும்பியது போன்று வாழ முடியும் என பிரச்சாரம் செய்ய முடியும்.

எனினும் இலங்கை பௌத்தர்களின் நாடு அல்ல. இலங்கையர்களின் நாடு. அந்த இலங்கையர்களின் நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

நாங்கள் பெரும்பான்மையினர் என்ற காரணத்திற்காக எங்கள் நோக்கத்தை மற்றவர்கள் மீது திணிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்